Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் அஜித்திற்கு கதை வைத்திருக்கும் சுசீந்திரன்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பாயும்புலி. இப்படத்திற்கான வெளியீட்டு வேலைகளில் பிஸியாகவிருக்கிறார் இயக்குநர். இப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படம் சுசீந்திரனுக்கு எட்டாவது படம். அடுத்தப் படத்திற்கான கதை ரெடியாகிவிட்டதா? யாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ பொதுவாக நான் கதை திரைக்கதை உருவாக்க நாலைந்து மாதங்கள் எடுத்துக் கொள்வேன். அடுத்தப் படத்திற்கான கதை தயாராகி விட்டது.

விஜய், அஜீத், மோகன்பாபு, பவன் கல்யாண் மாதிரி நடிகர்களுக்கான கதை. என் படங்களில் எப்போதும் ஒரு செண்டிமெண்டல் டச் இருக்கும். எவ்வளவோ காட்சிகள் இருந்தாலும் ஏதாவது ஒரு காட்சியாவது கண்கலங்க வைத்து ஒரு துளி கண்ணீராவது சிந்தவைக்க வேண்டும் என்று நினைப்பேன்.

கண்ணோரம் நீர் கசியவைக்க வேண்டும். கண்கலங்க வைத்தால் தான் அது சினிமா. செண்டிமெண்ட் இல்லாமல் சினிமா இல்லை. அப்படி இப்படத்திலும் காட்சிகள் இருக்கும்.” என்றார் சுசீந்திரன்.  விஜய் அல்லது அஜித் இருவரில் யார் ஓகே சொன்னாலும் படம் இயக்க ரெடியாகி விடுவார் என்று தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close