Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகமுதல்வர் ஜெயலலிதாவுடன் சிவாஜி குடும்பம் சந்திப்பு

சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க இடம் கொடுத்த தமிழகஅரசு, இப்போது மணிமண்டபத்தையும் அரசே அமைத்துத் தரும் என்று அறிவித்திருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பைச் சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா.  இதற்காக நடிகர்சங்கம், தயாரிப்பாளர்கள்சங்கம் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்த கட்டமாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் குடும்பத்தினர் எல்லோரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

இன்று தலைமைச்செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முதல்வரைச் சந்தித்துப் பேசிவிட்டு சிவாஜி குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியில் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தச்சந்திப்பில் நடிகர்பிரபு, அவருடைய அண்ணன் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர், நடிகர்விக்ரம்பிரபு வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் இதில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close