Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரையுலகுக்கு நன்மைசெய்ய கமல் எடுத்திருக்கும் புதியமுடிவு

கமல் இப்போது தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பை முடித்து அந்தப்படத்தை வெளியிடும் வேலைகளில் இருக்கிறார். தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பை நாற்பதுநாட்களுக்குள் முடித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன் அவர் நடித்த பாபநாசம் படத்தின் படப்பிடிப்பும் நாற்பதுநாட்களுக்குள் முடிந்துவிட்டது. இது தொடர்பாக அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் பேட்டி கொடுத்தபோது அவரிடம் இதுபற்றிக் கேட்கப்பட்டது.

நாற்பதுநாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகிறீர்களே? எப்படி என்று கேட்டதற்கு, நூறுநாட்கள், இருநூறுநாட்கள் படப்பிடிப்பு நடத்திப் படமெடுத்தால் மக்கள் பார்ப்பார்கள் என்று சொல்லும் சில பேரைப் பார்த்து நாங்களும் தவறான வழியில் சென்றுகொண்டிருந்தோம்.

ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களே ஐம்பது நாட்களில் எடுத்துவிடுகிறார்கள், அப்படி இங்கு இருநூறுநாட்கள் எதற்குப் படப்பிடிப்பு நடத்தவேண்டும், படமே நூறுநாட்கள்தாம் ஓடுகிறது.

எனவே இந்தப்படங்கள் மட்டுமில்லை இனிவரும் படங்களையும் இதேபோல் வேகமாக எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். தமிழ்த்திரையுலகின் முன்னோடியாக இருக்கும் கமல் எடுத்திருக்கும் இந்த முடிவை திரையுலகினர் அனைவரும் பின்பற்றினால் திரையுலகுக்கு நல்லது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close