Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முருகதாஸ் படம் தாமதமாவது எதனால்?

மௌனகுரு படத்தின் இந்திப் பதிப்பாகத் தயாராகிக்கொண்டிருக்கும் அகிரா படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷிசின்ஹா நாயகியாக நடிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்தது. நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

அந்தஇடைவெளியில் படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த மாற்றத்தின்படி கதையில் நாயகிக்கு ஒரு அப்பாவை உருவாக்கிவிட்டார்களாம். அந்தவேடத்தில் வேறு யாரையும் நடிக்கவைப்பதைக் காட்டிலும் சோனாக்ஷியின் அப்பா சத்ருகன்சின்ஹாவையே நடிக்கவைக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பாகவே அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள், ஆனால் அவர் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு இப்போதுதான் நடந்துகொண்டிருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close