Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன், விமல் படங்களுக்கு உதவும் விஷால்

  சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தை வேந்தர்மூவிஸ் தயாரித்திருக்கிறது. அதேநாளில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் முன்னோட்டம் வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தை வேந்தர்மூவிஸ்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. அதனால் பாயும்புலி படம் திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினிமுருகன் படத்தின் முன்னோட்டத்தைத் திரையிடவிருக்கின்றனர். இதுமட்டுமின்றி பாயும்புலி படத்தை வெளியிடும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் விமல் நடித்த மாப்ளசிங்கம் படத்தின் முன்னோட்டத்தையும் திரையிடவிருக்கிறார்களாம்.

பாயும்புலி படத்தைத் தயாரித்த வேந்தர்மூவிஸ் நிறுவனம் மற்றும் அப்படத்தை வெளியிடும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் ஆகியன தங்களுடைய அடுத்தபடங்களுக்கும் இந்தப்படத்தின் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றன. எப்படியிருந்தாலும் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

 
 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close