Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சல்மான், அக்‌ஷய் போன்ற நடிகர்களுடன் பழகியது எப்படி? அசின் விளக்கம்

 மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதல் திருமணம் செய்ய இருக்கும் அசின் திருமணத்திருக்குப் பிறகும் நடிப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ரெடி பட வேளையில் சல்மான்கான் அசினுக்கு பங்களா ஒன்றைக் கொடுத்ததாகவும், அக்‌ஷய் குமாருடன் அசினுக்கு நெருக்கம் என பல வதந்திகள் இந்தியில் பரவின. இந்நிலையில் இதற்கெல்லாம் பதில் கூறியுள்ளார் அசின்.

அவர் கூறுகையில்,என் திரையுலக வாழ்க்கை நன்றாகப்போகிறது. சில வதந்திகளும் என்னைப்பற்றி வந்தன. அதற்காக வருந்தவில்லை. என்னைப் பொறுத்தவரை, எந்த கதாநாயகனுடனும் நான் நெருங்கிப்பழகியது இல்லை. ஒவ்வொருவருடனும் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எப்போதும் நான் ஒதுங்கியே இருந்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். எனவும் கூறியுள்ளார் அசின்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்