Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.ராஜேந்தர் புகாருக்கு நயன்தாரா பதிலடி

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிக்கும் இதுநம்மஆளு படத்துக்காக நயன்தாராவிடம் தேதிகள் கேட்டபோது தரமறுக்கிறார் என்று அவர் மீது தயாரிப்பாளர்கள்சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் டி.ராஜேந்தர்.

இந்தவிசயத்தில் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், நயன்தாரா மீது எந்தத் தப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக நயன்தாரா எதுவும் பேசவில்லை. இந்த விசயத்தில் என்ன நடந்தது? இந்தப்படத்துக்காகப் பலமுறை நயன்தாராவிடம் தேதி வாங்கி அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைத் தாண்டி, அவருக்குப் பேசியபடி சம்பளம் தரவில்லை என்பதுதான் உண்மை என்கிறார்கள்.

அவருக்கு மட்டுமில்லை படத்தில் பணியாற்றிய யாருக்குமே சரியானபடி சம்பளம் தரவில்லையாம். நயன்தாராவுக்கும் அதேபோல் செய்ததால் அவர் கடுப்பாகிவிட்டார் என்கிறார்கள். சம்பளம் பற்றிக் கேட்கும்போதெல்லாம் போனையே எடுக்காதவர்கள் இப்போது இப்படிப் பேசுகிறார்களே என்று கோபப்பட்டிருக்கிறார் நயன்தாரா.

அதோடு இந்தச் சிக்கல் பற்றி அவரிடம் விசாரித்தவர்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் பஞ்சாயத்துப் பேசியவர்கள் அமைதியாகிவிட்டார்களாம்.

எனக்குக் கொடுக்கவேண்டிய சம்பளத்தைத் தராவிட்டாலும் பரவாயில்லை இனிமேல் இந்தப்படத்துக்கு வரமாட்டேன் என்றும் அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. டி.ராஜேந்தர் தரப்பு பேசியபடி எல்லோருக்கும் சம்பளத்தைக் கொடுத்தால் எந்தச் சிக்கலும் இருக்காது என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்