Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை விமான நிலையத்தில் கபாலி

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் படம் கபாலி. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இப்படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால் மலேசியாவில் படப்பிடிப்பிற்கு தாமதமாவதால் முதலில் சென்னையில் எடுக்கவேண்டிய காட்சிகளை எடுத்துவிட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன்படி, வரும் 17ம் தேதி சென்னை விமான நிலையத்தில் முதல்கட்ட கபாலி படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இதற்கான முழு அனுமதியும் பெற்றுவிட்டதாகத் தெரிகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ரஜினிக்கு மகன்களாக அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், கதாநாயகியாக ராதிகா ஆப்தே, மற்றும் தன்ஷிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்