Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் வருகிறார் பழைய நமீதா

விஜயகாந்த் நடித்த எங்கள்அண்ணா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நமிதா, தொடர்ந்து விஜய், அஜித் உட்பட பெரும்பாலான முன்னணிநடிகர்களுடன் நடித்தார். கடைசியாக 2011 இல் வெளிவந்த இளைஞன் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சில கன்னடப்படங்களில் நடித்தார். இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதற்கிடையே அவருடைய உடல்எடை கூடிவிட்டது. சுமார் 92 கிலோ இருந்தாராம். அதனால் நமிதா இப்படியாகிவிட்டாரே என்று பலரும் விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

திடீரென கொஞ்சகாலம் அவரை எங்குமே பார்க்கமுடியவில்லை. அதற்குக் காரணம், தன்னுடைய உடல்எடையைக் குறைத்து பழைய நமிதாவாக ஆகவேண்டும் என்று உழைத்திருக்கிறார்.

இதன்விளைவு சுமார் இருபதுகிலோ குறைந்து பழையநிலைக்கு வந்துவிட்டாராம். அதேபோல் தமிழில் நடிக்கவும் ஒப்பநதமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்லிம்மான நமீதா ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4666

MUST READ

எடிட்டர் சாய்ஸ்