Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரச்னையை துவக்கிய டி.ஆர்...உண்மையில் முடிக்க நினைக்கிறாரா எஸ்.டி.ஆர்?

ஒரு பக்கம் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க மறுக்கிறார். மேனேஜரிடம் பேசினால் தேதி தர மறுக்கிறார் , இரண்டு பாடல்களை முடித்துத் தரவேண்டும் என  நயன்தாரா மீது டி.ராஜேந்தர் புகார் கொடுத்தார். இன்னொரு பக்கம் நயன்தாரா பணமே கேட்கவில்லை. படத்தின் கதையில் அவருக்கு அதீத நம்பிக்கை படத்தை நல்ல முறையில் ரிலீஸ் செய்தாலே போதும் என நினைப்பதாக பாண்டிராஜ் கூறினார். 

இந்நிலையில் பணம் கேட்கும் போது போனை எடுக்காதவர்கள் இப்போது இப்படி பேசினால் எப்படி என கேட்டார் நயன்தாரா. இந்தப் பிரச்னைக்கு நடுவில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ’இது நம்ம ஆளு’ குறித்து வெளியாகும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வதந்தி. கண்டிப்பாக திட்டமிட்டபடி படம் வெளியாகும் . நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் எனக் கூறியுள்ளார்

அப்படியெனில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா குறித்து கொடுத்த புகாரும் வதந்திதானா. பாண்டிராஜ் நயன்தாரா குறித்து கூறிய கருத்துகளும் வதந்திதானா. எல்லாம் சரி நாளை வேலைகள் முடிந்து இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ் தேதி இதுதான் என வெளியாகும் அப்படியெனில் அதுவும் இந்த படம் சார்ந்த செய்திகளே அதுவும் வதந்தி என்று சொல்லிவிடலாமா என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். 

இப்படியே போனால் நல்ல கதை , நல்ல படம் எனக் கூறிக்கொண்டே வைத்திருந்தால் இயக்குநர் பாண்டிராஜ், நயன்தாரா, சூரி, ஜெய், ஆண்ட்ரியா என பல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் நிலை என்ன. அடுத்த படத்திற்கு இவர்கள் போக வேண்டாமா ஒரு படத்தின் வேலையிலேயே உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்றே கேட்கத் தோன்றுகிறது. 

இதே போல் என்னைப் பற்றிய எந்த செய்தியாகினும் அதை நம்ப வேண்டாம் என சிம்பு பிரபல சேனலில் கூறியது போல் இப்போது மீண்டும் சொல்லியிருக்கிறார். நல்ல செய்திகள், ரிலீஸ் அறிவிப்புகள் வந்தால் அதை கண்டுகொள்வதில்லை. அதேசமயம் கொஞ்சம் பிரச்னை எனில் உடனே வதந்தி நம்பாதீர்கள் எனக் கூறுவது நியாயமா. கலைஞர்கள் எனில் வெற்றியை ஏற்றுக் கொள்வது போல் விமர்சனத்தையும் அல்லவா ஏற்றுக்கொள்ள வேண்டும். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்