Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார் ஜெயம்ரவி

தனிஒருவன் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயம்ரவி  முன்னணி நாயகர்கள் வரிசைக்கு வந்துவிட்டார் போலும், அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகள் வெளியானதும் இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்திருக்கிறார்.

ஜெயம்ரவி அடுத்து நடிக்கும் படம் மிருதன். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார். இப்படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயம்ரவி - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழுப்படப்பிடிப்பும் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.

மிருதன் படத்தில் புகைபிடிப்பதுபோன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம்பெறவில்லை என்று சொல்லுகிறார்கள். இப்படத்திற்கு இசை டி.இமான். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close