Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிக்கு ஜோடி காத்ரீனா?- எந்திரன் 2 அப்டேட்!

 ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக உள்ள படம் எந்திரன் 2’. இந்த படத்தின் கதை வேலைகளில் தற்போது ஷங்கர் பிசியாக இருக்கிறார்.இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக காத்ரீனா கைஃப் நடிக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. 

இதனையடுத்து நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் திரைக்கதை எழுதி வருகிறார்.  அவர் எழுத்து வேலைகள் மட்டுமே இப்போதைக்கு முடிந்துள்ளன. மேலும் ரஜினியைத் தவிர்த்து எந்த நடிகர்களும் உறுதியாகவில்லை. 

 

விக்ரம் வில்லனாக நடிக்கிறார், காத்ரீனா கைஃப் ஹீரோயின் இதெல்லாம் வதந்திகளே. கபாலி படத்தின் வேலைகள் முடிந்து ரஜினிகாந்த் வந்தபின்பே முடிவுகள் உறுதியாகும். மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்