Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாயும்புலியைத் திரையிடாவிட்டால் நடவடிக்கை- தயாரிப்பாளர்கள்சங்கம் எச்சரிக்கை

பாயும்புலி படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று புதுப்படங்களைத் திரையிடமாட்டோம் என்று அறிவித்த தயாரிப்பாளர்கன்சங்கம், இன்று அம்முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பில், திட்டமிட்டபடி நாளை பாயும்புலி உட்பட அனைத்து நேரடித்திரைப்படங்களும் வெளியீடு செய்யப்படும், தமிழ்நாடுதிரையரங்கஉரிமையாளர்கள் ஒத்துழைப்புக் கொடுத்து அனைத்துப்படங்களையும் திரையிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாமல், வேறு படங்களை மனதில் வைத்துக்கொண்டு பாயும்புலி உட்பட அனைத்துத் திரைப்படங்களையும் திரையிடாமல் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நட்டத்தை எற்படுத்தும் திரையரங்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழ்த்திரையுலகம் ஒன்றுகூடி முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close