Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close
if(ls.v_20170227){ls.removeItem("v_20170227");}ls.v_20170228 = ls.v_20170228 + ",99_51905";

பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவி?

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படம் ‘பாகுபலி ’. படத்தின் பிரம்மாண்டமும், காட்சியமைப்பும் என இப்போதுவரை படத்திற்கான மவுசு இறங்கவே இல்லை. இப்போது படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என காத்திருப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டன. அதில் முக்கியமான கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர்தான். கம்பீரமும், ஆழமான  வசனங்களும் நிறைந்த அந்த கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்டவர் ஸ்ரீதேவி. ஆனால் அவர் பெருந்தொகை கேட்கவே பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். 

புலி படத்தின் மூலம் தென்னிந்தியப் படங்களுக்கு வருகை தந்திருக்கும் ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து இப்போது வருத்தப்படுகிறாராம். மேலும் இப்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க விரும்புவதாக ராஜமௌலியிடம் கூறியுள்ளாராம். 

ஏற்கனவே படத்தின் பாத்திரங்கள் முதல் காட்சிகளைக் கூட வடிவமைத்து வைத்திருக்கும் ராஜமௌலி திடீரென இந்த பாகத்தில் ஒரு புது கேரக்டரோ அல்லது பழைய கேரக்டர்களில் மாற்றங்களோ செய்து ஸ்ரீதேவியை நடிக்கவைப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close