Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் , அஜித் படங்கள் வெளியாவதில் சிக்கல்?

 தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரையரங்குகளுக்கு எதிராக ஒன்றிணைந்து அக்டோபர் 23ம் தேதியிலிருந்து சில நாட்களுக்கு படங்கள் ரிலீஸ் கிடையாது என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் பல பெரிய பட்ஜெட் படங்கள் இதில் சிக்கியுள்ளன. 

அதில் முக்கியமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் , ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், நடிப்பில் உருவாகிவரும் படம் அஜித்தின் 56வது படம். படத்திற்கு இசை அனிருத். இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு தீபாவளி சிறப்பாக நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

இதே பாணியில் கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாகிவரும் படம் தூங்காவனம். இந்தப் படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்தின் வெளியீடும்  தீபாவளி சிறப்பாக வெளியிடும் என்ணத்தில் படக்குழு உள்ளனர். அதை ஒட்டியே படத்தின் வேலைகள் யாரும் எதிர்பார்க்க முடியா வேகத்தில் நடந்து முடிந்துள்ளன. 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் இந்தப் படங்கள் வெளியாவதில் தற்போது சிக்கல்கள் உருவாகியுள்ளன. எனினும் இன்னும் இரண்டு மாத காலங்கள் இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close