Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செங்கல்பட்டிலும் பாயும்புலி வெளியானது எப்படி?

விஷாலின் பாயும்புலி படம் வெளியாவதற்குள் பல சிக்கல்களைச் சந்தித்துவிட்டது. கடைசியாகவும் செங்கல்பட்டு தவிர மற்ற பகுதிகளில்தான் வெளியாகும் என்கிற நிலை இருந்ததாம்.

விடியவிடியப் பேச்சுகள் நடத்தி செங்கல்பட்டிலும் படத்தை வெளியிட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. என்ன நடந்தது? செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள் லிங்கா படத்தின் நட்டத்துக்காகத்தான் பாயும்புலி படத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள்.

கடைசிநேரம் வரை அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால்தான் தயாரிப்பாளர்சங்கமே படங்களைத் திரையிடமாட்டோம் என்று அறிவிக்கும் அளவுக்குப் போனது, அப்படியும் திரையரங்குஉரிமையாளர்கள் தங்கள் கோரிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் இப்போது பழையகணக்குக்ளைப் பார்த்துக் கொண்டிருக்கவியலாது என்கிற நிலை. இதனால் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தயாரிப்பாளர்தரப்பு டெபாசிட் செய்துவிடுவது என்றும், ஓரிருநாட்களில் பழையகணக்குகளைப் பார்த்து அதற்கேற்ப அந்தத்தொகையைப் பகிர்ந்துகொள்வதென்றும் முடிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த சமரசத் தீர்வையடுத்து செங்கல்பட்டிலும் பாயும்புலி வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.   

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close