Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தனி ஒருவன்’ படம் தான் கடைசி படம் : ஒரு கலைஞனின் வருத்தம்!

ஃபிலிம் ரோல்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு பின்னர் எடிட் செய்வதுதான் முந்தைய வழக்கம். ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இப்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்நிலையில் தனி ஒருவன் படம் தான், நான் ஃபிலிம் ரோலில் எடுக்கும் கடைசி படம் என தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி

.

பருத்தி வீரன், ராம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் , உள்ளிட்ட பல படங்களுக்கு வித்யாசமான ஒளிப்பதிவு யுக்திகளை கையாண்டு இயக்குநரின் கதைகளுக்கு உயிர் கொடுத்தவர் ராம்ஜி. தன் அனைத்து படங்களையும் இதுவரை ஃபிலிம் ரோலில் தான் படமக்கியிருக்கிறாராம்.ஆனால் அது இனி முடியாது என்கிறார். 

கடந்த மூன்று வருடங்களாக தனி ஒருவன் படத்திற்காக வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் மோகன் ராஜாவுடன் பணியாற்றிய ராம்ஜி இது குறித்து கூறுகையில்,. “என்னுடைய முதல் படம் ’வள்ளல்‘ முதல் “தனி ஒருவன்” படம் வரை ஃபிலிம்மில் தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்.

 “தனி ஒருவன்” படம் தான் ஃபிலிமில் நான் பதிவு செய்த கடைசி படமாக இருக்கும் என நினைக்கிறேன். இனி ஃபிலிம் வருமா வராதா என தெரியவில்லை, ஹாலிவுட்டில் இன்றும் ஃபிலிம்தான் பயன் படுத்துகிறார்கள். ஃபிலிமில் ஒளிப்பதிவு செய்யும்போது கிடைக்கும் அழுத்தம் டிஜிட்டலில் வருவது கஷ்டம் தான். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஃபிலிம் வரும் என்கிறார்கள், பார்க்கலாம்” என ஒளிப்பதிவாளர் ராம்ஜி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close