Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்தக் காட்சியா: தெறித்து ஓடும் மாகாபா.ஆனந்த்!

 மா.கா.பா.ஆனந்த் , ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகிவரும் படம் நவரச திலகம். காம்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த படமாம். மேலும் ஹீரோ மா.கா.பா. ஆனந்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இளைஞனாகவும், ஸ்ருஷ்டி டாங்கே மருத்துவக் கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். 

சமீபத்தில் இயக்குநர் காம்ரன் படம் குறித்து கூறுகையில், படத்தில் ஓரிடத்தில் முத்தக்காட்சி வைக்கப்பட இருந்தது. அந்த காட்சியில் நடிக்க சிருஷ்டி டாங்கே தயாராக இருந்தார். ஆனால் மா.கா.பா.ஆனந்த் நடிக்க மறுத்ததால், அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

இதுகுறித்து மாகாபா.ஆனந்திடம் கேட்டபோது, என்ன பாஸ் நடிக்க வந்திட்டீங்க அப்பறம் முத்தக்காட்சிக்கெல்லாம் நோ சொன்னால் எப்படி என்றபோது, நம்மள பத்தி செய்தி வருதா அட சந்தோஷமுங்க, வெளிய கிசு கிசு, தீயா பரவும் செய்தினா ஓகே, ஆனால் வீட்ல அடி வாங்க முடியாதே. 

அதுவும் இப்பதான் ஆரம்பகட்டம். எடுத்தோனயே எதுக்கு ரிஸ்க். கொஞ்ச கொஞ்சமா போவோம். பாட்டு சீன்ல ஒரு ஃப்லோவுல வந்தா ஓகே, தனியா கிஸ் சீன்’னா வீட்ல அடி பிரிச்சுருவாய்ங்க. அதான் நடிக்க மறுத்துட்டேன். அதுவும் சீன் வேற கொஞ்சம் கசமுசாவா இருந்துச்சு பாஸ் என்கிறார் வெள்ளந்தியாக.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close