Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் படத்துக்குத் தேதி தராமல் இழுத்தடிக்கிறாரா ஸ்ருதி?

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சரியாகப் போகவில்லை, அதற்குக் காரணம் படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்றும் செய்திகள் வரத்தொடங்கியிருக்கின்றன.

அந்தப்படத்தைப் பற்றி அவர்களாக எந்தச் செய்தியும் கொடுக்காததால் இதுபோன்று செய்திகள் வருகின்றன என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன் தரப்பு, இது முற்றிலும் பொய்யான செய்தி என்று சொல்லியிருக்கிறது.

படக்குழுவினரிடம் இதுபற்றிக் கேட்டால், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே திட்டமிட்டபடி நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் மொத்தப்படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று சொல்கிறார்களாம்.

ஸ்ருதி ஒரு படத்துக்கும் தேதிகள் ஒதுக்கும் விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார் என்றும் எதிர்பாராமல் ஏதேனும் மாற்றங்கள் நடந்தால் தவிர அவருடைய விசயத்தில் எந்தக்குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close