Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரசிகர்களை ஏமாற்றிய ராஜமௌலி!

 பாகுபலி 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் இம்மாதம் துவங்கி நடைபெற உள்ளது. வசூல் மன்னனாக பெயர் வாங்கிய ராஜமௌலி பாகுபலி படத்தையடுத்து என்ன படம் யாருடன் என இப்போதே தெலுங்கில் செய்திகள் சுற்றத் துவங்கிவிட்டன. 

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் என செய்திகள் பரவ தெலுக்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் செம குஷியாகிப் போனார்கள். இது ஒரு பக்கம் எனில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி படம் இயக்க உள்ளதாகவும் இன்னொரு வதந்தி பரவ தற்போது இரண்டும் இல்லை என்றாகியுள்ளது.

ராஜமௌலி அடுத்து ‘நான் ஈ’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் பிஸியாகப் போகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் நானியும் ’பலே பலே மொகதீவோ’ என்ற படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்புகளைப் பெற்றுள்ளது. எனவே இதுதான் சரியான தருணம் என அடுத்த இரண்டு வருடங்கள் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் தான் என்கிறது ராஜமௌலிக்கு நெருங்கிய தரப்புகள்.

இந்நிலையில் மகேஷ் பாபுவின், ரசிகர்களுக்கும், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு விருப்பமான நடிகர் பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று நினைத்த வேளையில் இப்படி ஒரு அறிவிப்பு சம்மந்தப்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close