Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரண்யாமோகன் திருமணம் நடந்தது, சினிமாவை விட்டு விலகுகிறார்

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஈரம்’, ‘வேலாயுதம்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், சரண்யா மோகன். கேரளாவை சேர்ந்த இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

சரண்யா மோகனுக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்ய, இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி,  நிச்சயம் செய்திருந்தார்கள்.

அதன்படி, சரண்யா மோகன்–அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் நேற்று காலை ஆலப்புழாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதை தொடர்ந்து மணப்பெண் சரண்யா மோகன் கூறும்போது, ''திருமணத்துக்கு பின் நான் சினிமா உலகை விட்டு விலக உள்ளேன். இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நான், நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்த உள்ளேன்" என்று தெரிவித்து உள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close