Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

25 வருடங்கள் கழித்து தமிழில் டப்பிங் பேசிய ஸ்ரீதேவி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹாசன் , சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். 20 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி மீண்டும் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார்.

இன்னொரு சுவாரசிய தகவலாக இப்படத்தில் ஸ்ரீதேவியே சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார். இருபத்தைந்து வருடங்கள் கழித்து தமிழில் டப்பிங் பேசியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி இந்தி , தெலுங்கு மொழிகளிலும் புலி படம் நேரடிப்படமாக வெளியாக இருப்பதுதான் சிறப்பான செய்தி.

அதிலும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக சென்னையிலேயே தங்கி இருந்து டப்பிங் வேலைகளை முடித்துள்ளாராம். எல்லாவற்றிற்கும் மேல் விஜய் படம் இந்தியில் வெளியாக இருப்பது இதுதான் முதல் முறையாம்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close