Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்கானா கிராமத்தை தத்தெடுக்கிறார் பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ் ராஜ் தெலுங்கானாவில் உள்ள கிராமம் ஒன்றைத் தத்தெடுக்க இருக்கிறார். தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி கே.டி.ராமாராவை சந்தித்து மெஹபூப் நகர் மாவட்டத்தின் கொண்டாரெட்டி பள்ளி என்னும் கிராமத்தை தத்தெடுக்க இருக்கிறார்.

அங்கு நடந்து வரும் மிஷன் காக்காட்டியா, குளங்கள் , ஏரிகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் இருக்கிறாராம் பிரகாஷ் ராஜ். இது தவிர்த்து தனது அறக்கட்டளை சார்பாகவும் கர்நாடகாவில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

பிரகாஷ் ராஜின் இந்தச் செயலுக்கு தெலுங்கானா அரசின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் உண்டு என தெலுங்கான மந்திரி வாக்குறுதியும் அளித்துள்ளாராம்.தெலுங்கில் அதிகமான படங்களில் பிரகாஷ் நடித்திருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அங்கே அதிகம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close