Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றிக்காக விஷாலின் அடுத்த இலக்கு?

பாண்டியநாடு படத்தைத் தொடர்ந்து விஷால், சுசீந்திரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் பாயும்புலி. கலவையான விமர்சனங்களுடன் சுமாரான அளவில் வசூல்சாதனையும் படைத்திருக்கிறது.

பாயும்புலி படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் என்பதில் கவனம்செலுத்தத் தொடங்கியிருக்கிறார்  விஷால். 

பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீகிதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிவரும் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படம். 

மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமான கேத்ரின் தெரஸா நாயகியாக நடிக்க, ஹிப்ஹாப் தமிழாஆதி இப்படத்தின் இசையை கவனிக்கிறார். இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். முத்தையாவின் முந்தைய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்த லட்சுமி மேனன் தான் இப்படத்திலும் நாயகியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட இப்படங்களைத் தொடர்ந்து லிங்குசாமியுடன் சண்டக்கோழி பாகம் இரண்டிலும் நடிக்கவிருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்