Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த இயக்குநரை உறுதிசெய்தார் அஜித்?

 சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நவம்பர் பத்தாம்தேதி தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டு வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

செப்டம்பருக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டால் அக்டோபரில் மற்றவேலைகளை முடித்து நவம்பர் பத்தில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கிடையே அஜித்தின் அடுத்தபடத்தை இயக்கும் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

கே.வி.ஆனந்த் உட்பட சில பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அஜித் முடிவுசெய்திருப்பது விஷ்ணுவர்தன் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாகவே இதுதொடர்பான பேச்சுகள் இருந்தன. இப்போது அது உறுதியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close