Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருத்தத்தில் அஞ்சலி

அஞ்சலி நடித்த மாப்ளசிங்கம் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது, இதற்கடுத்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதோடு தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறார்.

இறைவி தவிர ஓரிருபடங்களில் நடிப்பதற்காகப் பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் ஒருபடத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று கேட்காமல், நாள் கணக்கில் சம்பளம் கேட்கிறார், ஒருநாளைக்கு எட்டுலட்சம் சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

இது தொடர்பாக அஞ்சலி தரப்பில் கேட்டால், இது முற்றிலும் தவறான தகவல், கதாநாயகிகள் பெரும்பாலும் நாள் கணக்கில் சம்பளம் கேட்கமாட்டார்கள் அஞ்சலியும் அப்படித்தான் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து தன்னைப் பற்றி இப்படி ஏதாவதொரு தவறான செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அஞ்சலி வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close