Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் வில்லனாக நடிக்கிறார் சிபிராஜ்?

தமிழுக்கு எண்ஒன்றை அழுத்தவும் படத்தை  இயக்கிய ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கவிருக்கும் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா  நடித்து வெளியான படமான போக்கிரி ராஜா பட பெயரையே   இப்படத்திற்கும் வைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. 

ஜீவா, ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.  இயக்குநர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “  புதிய டீமுடன் போக்கிரி ராஜா படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. படத்திற்கு  டி.இமான் இசையமைக்கவிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். 

வில்லன் கதாபாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாக்ஸன் துரை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்திற்கான படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சென்னையில் நடந்துவருகிறது. பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் முடியும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close