Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உருவாகிறது 'எங்கள் வீட்டு பிள்ளை'- சிவகார்த்திகேயன் ஆன்தம்!

ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர்களுக்காக அடிக்கடி எதாவது பாடல்கள் எழுதி அதை நெட்டில் உலாவரச் செய்தல் வழக்கம்.அந்த வரிசையில் இப்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 'எங்கள் வீட்டுப் பிள்ளை' எனும் ஓர் ஆல்பத்தை உருவாக்கி 11 ஆம் தேதி வெளியிடுகின்றனர் அவரது ரசிகர்கள்.

அது குறித்து அந்த ஆல்பத்தின் இயக்குனர் திரு.பிரகாஷ் பாஸ்கரிடம் பேசியதில் ," தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்து ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது நடிகர் சிவகார்த்திகேயனைத் தான். அவங்கள வச்சு ரசிகர்களுக்காக ஒரு ஆல்பம் பண்ணலாமே னு நாங்க எடுத்த முயற்சி தான் இது.

தலைவா, தெய்வமே என ஹீரோவை புகழ்பாடும் விதமாக இல்லாமல் அவர் மூலமா பாசிட்டிவ் உத்வேகத்த ரசிகர்கள் மத்தியில் கொடுக்கும் விதமா இந்த ஆல்பம் இருக்கும்.விஷுவல்ஸுக்கு அவர் பட ஸ்டில்ஸையே யூஸ் பண்ணியிருக்கோம்.

கணேஷ் எடிட் செய்ய நான் எழுதி,இயக்க ரஷாந்த் அர்வின் இசையில் ,ஆதித்யா சேனல் புகழ் 'திருச்சி'சரவணக்குமார் எங்களுடன் இணைந்து பாட இந்த ஆல்பம் உருவாகியிருக்கு"என்றவர் 'சி.எஸ்.கே ஆன்தம்(மஞ்ச சட்ட கூட்டம்) ','திருச்சி ஆன்தம்'என 50 க்கும் மேற்பட்ட பாடல்களையும் ஆல்பங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த டீம், தொகுப்பாளர் ரியோ வுடன் இணைந்து வெளியிட்டிருக்கும் 'எனக்குப் பிரச்சன' என்னும் ஆல்பம் சூப் பாய்ஸிடமும் யங் கேர்ள்ஸி டமும் வைரலாகி லைக்ஸ்களை வெகுவாக குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-லோ.இந்து -

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close