Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கிருந்தாலும் வாழ்க! நயன்தாராவை வாழ்த்தும் ஆர்யா

ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கும் படம் யட்சன். அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தியவர் விஷ்ணுவர்தன் என்பதால் எப்போது நடிக்க கூப்பிட்டாலும் உடனே ஆர்யா ஓகே சொல்லிவிடுவார்.

பட்டியல், சர்வம், ஆரம்பம் என தொடங்கி யட்சன் வரையும் ஆர்யா இல்லாமல் விஷ்ணுவர்தன் படம் கிடையாது என்ற அளவுக்கு இவர்களின் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. யட்சன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணுவர்தனுடனான கூட்டணி பற்றியான ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார் ஆர்யா.

“ விஷ்ணுவர்தனுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பு தான் காரணம். ஆனால் படப்பிடிப்பின் போது நண்பன் எனபதைக் காட்டிக் கொள்ளாமல் இயக்குநராக மாறிவிடுவார். பட்டியல் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் ந பாலத்திலிருந்து ஆற்றில் குத்திப்பதுபோன்ற காட்சி. நான் முதலில் தயங்கினேன். உடனே நான் வேண்டுமென்றால் குதித்துக் காட்டட்டுமா? என்று கேட்டதுமே அடுத்த நிமிடம் நானே குதித்தேன். அந்த அளவிற்கு சினிமாவில் மேல் பிரியம் கொண்டவர்”

இந்தப் படத்தின் ஹீரோயின் தீபாசன்னதியைப் படப்பிடிப்பின் போது பேச வைத்ததே பெரியவிஷயம். இன்னும் அவர் பிரியாணி விருந்து சாப்பிடவில்லை என்ற ஆர்யாவிடம் நயன் தாரா பற்றிக் கேட்கப்பட. அதற்கு, அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவரின் திருமணத்தில் நிச்சயமாக கலந்துகொள்வேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவருடைய திருமணம் பற்றிய கேள்விக்கு, காதல் திருமணம் தான் செய்துகொள்ளப்போகிறேன்  என்று சொல்லியிருக்கிறார். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close