Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓரினச் சேர்க்கையாளரா ராதிகா ஆப்தே?

சர்ச்சை வீடியோ, ஆபாச வீடியோ, கபாலி பட நாயகி, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த குறும்படமாக அகல்யா என ராதிகா ஆப்தே இந்தியா ஃபேமஸ் ஆகிவிட்டார். தமிழில் அழகு ராஜா படத்தின் சின்ன கேரக்டர் தவிர்த்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை என்றாலும் முன்னணி நாயகிகளுக்கு சமமாக ட்ரெண்டாகிவிட்டார்.

இந்நிலையில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப்பின் சர்ச்சையான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் கதைதான் இப்போது பரபரப்புச் செய்தி. கதைப்படி ராதிகா ஆப்தே ஓரினச்சேர்க்கையாளராம். இப்போதைய நிலவரப்படி ஓரினச்சேர்க்கை அதன் சவால்கள், பின்னணி எனக் கதை நகரவிருக்கிறது.

இப்போது எல்லாருக்கும் பெரிய கேள்வி ராதிகாஆப்தேவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை யார் என்பதே. மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா, இன்னும் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே இந்தியாவில் ‘ஃபைர்’ என்ற ஓரினச்சேர்க்கை படம் வெளியாகி அதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு படமா என கேள்விகள் எழுந்துள்ளன. அனுராக் கஷ்யப் என்றால் எல்லாமே வித்யாசம் என்பதால் இந்தப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close