Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைகீழாக நின்று டப்பிங் பேசிய ஆர்யா!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடித்திருக்கும் ‘யட்சன்’படம் இன்று வெளியாகியிருக்கிறது.

இப்படத்தின் கதை ஆனந்த விகடன் வார இதழில் எழுத்தாளர்கள் சுபா எழுத்தில் வெளியான கதையிலிருந்து பெறப்பட்டது. எனவே இக்கதையை பெருமைப் படுத்தும் விதமாக படம் வெளியாகும் இன்று கதை நூல் வடிவாக புத்தக வெளியீடு இன்று நடைபெற்றது.

இப்புத்தகத்தை ஆர்யா வெளியிட கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கிருஷ்ணா பேசும் போது, “ அண்ணன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்த கனவு யட்சன் படம் வழியாக நிஜமாகியிருக்கிறது.

யட்சன் முதல் நாள் படப்பிடிப்புக்கு செல்லும் போது ஆர்யா போன் செய்து, “ அண்ணன் படம்னு ஜாலியா போறியா என்று  கிண்டல் செய்தார்” அப்போ அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஐந்து படங்கள் மேல் நடித்துவிட்டேன். ஆனாலும் முதல் நாள் ஷூட்டிங்கில் ஒரு ஷாட்டுக்கு 17 முறை ரீடேக் எடுத்தேன்.

என் அண்ணன் முன்னாடி எனக்கு நடிப்பு வரவில்லை. அதுபோலதான் முதல் நாள் டப்பிங் போகும் போதும் சின்ன சின்ன டைலாக்கு கூட என்ன படுத்தி எடுத்துட்டார். 

ஆர்யா தலைகீழா நின்னு பேசுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருக்கு. அதுக்கான டப்பிங் கூட தலைகீழா நின்னு பேசுனு ஆர்யாவை சொல்லிட்டாரு. ஒரு விஷயம் சரியா வரணும்னா சின்ன சின்ன விஷயம்னாலும் கஷ்டப்பட்டு செய்வார் விஷ்ணுவர்தன்” என்றார் கிருஷ்ணா.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்