Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வில்லன்களின் மனம் கவர்ந்த அஜித்!

வீரம் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் தல 56. படத்திற்கு இசை அனிருத். படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாடல் காட்சிகளுக்காக அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் படத்தில் இரண்டு வில்லன்களாக நடிக்கும் பாலிவுட் நடிகர்கள் ராகுல் தேவ் மற்றும் துகான் சிங் இருவரும் அஜித் குறித்து புகழ்ந்து பேசியுள்ளனர். தயாரிப்பாளர் பெரிய நடிகர்களுக்கான சில சிறப்பு தேவைகள் மற்றும் வசதிகள் செய்துக் கொடுக்க தயாராக இருப்பினும் அதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விட்டு மிகவும் எளிமையாக இருக்கிறார்.

டீ கொடுக்கும் பாய் முதல், லைட் மேன் , கேமரா மேன், என அனவரிடமும் நெருங்கிப் பழகுகிறார். புதிதாக எங்களைப் போல் வேற்று மொழியிலிருந்து வந்தவர்களை கட்டியணைத்து வரவேற்பு கொடுத்து எங்களுக்கு இருக்கும் தயக்கங்களை அவரே பேசி , பகிர்ந்து படக்குழுவில் நெருக்கமாக்கி விடுகிறார் என இரண்டு வில்லன் நடிகர்களும் அஜித் குறித்து பேசியுள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close