Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் புகைப்படம் கபாலி படத்துடையதா? இயக்குநர் ரஞ்சித் பதில்

   சமுகவலைத்தளங்களில், கபாலி படத்தில் இதுதான் ரஜினியின் வேடம் என்று சொல்லி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். முகம்முழுவதும் பல வண்ணங்களைத் தேய்த்துக் கொண்டு தலைநிறைய எராள முடியுடன் இருக்கும் அந்தப்படத்தைக் காணச்சகிக்கவில்லை.

கபாலி படத்தில் அவர் தாதாவாக நடிப்பதாகச் சிலரும் காவல்துறைஅதிகாரியாக நடிக்கிறார் என்று சிலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்படம் இவை இரண்டுக்குமே பொருந்தவில்லை என்பதோடு நன்றாகவும் இல்லை. பார்ப்பதற்கு பழைய ஹாலிவுட் படமான சா படத்தின்  பொம்மை தோற்றத்தை சற்றே ஒத்திருப்பது போல் உள்ளது.

அதனால், படம் பற்றிய எந்தச் செய்திக்கும் பதில் சொல்லாத இயக்குநர் பா.ரஞ்சித், இந்தப்படம் வேகமாகப் பரவுகிறது என்றவுடன், இது கபாலி படம் சம்பந்தப்பட்ட புகைப்படம் இல்லவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.      

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close