Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவியைப் பிரிகிறார் நான் ஈ வில்லன் சுதீப்?

ராஜமெளலியின் நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் தமிழில் அறியப்பட்ட கன்னட நடிகர் சுதீப். தற்பொழுது விஜய் நடிக்கும் புலி படத்தில் வில்லனாக நடித்துவருகிறார்.

சுதீப் தனது மனைவியை விவாகரத்து செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.  சுதீப்பும், அவரது மனைவி ப்ரியாவும் இணைந்தே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு சுதீப்-ப்ரியா திருமணம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 14 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.

இவர்களின் மகள் சான்வி, மைனர் என்பதால் ப்ரியாவிடமே இருக்கவும் சுதீப் சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் பிரியாவிற்கு ரூ19 கோடி ஜீவனாம்சமாக கொடுக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'புலி' படத்தை அடுத்து சுதீப் தற்போது  கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் “ முடிஞ்சா இவன புடி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்