Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி பிறந்தநாளில் புலி வெளியாவது எதனால்?

புலி படம் இரண்டுவாரங்கள் தள்ளிப்போகக் காரணம், அப்படத்தின் கிராபிக்ஸ்வேலைகள் முடிவடையாததுதான் என்று சொல்லப்பட்டது. தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு இன்னும் இருபதுநாட்களே உள்ள நிலையில் அந்தவேலைகள் நிறைவடைந்துவிட்டனவா? என்று கேட்டால், எல்லாவேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம். குறிப்பாக கிராபிக்ஸ்வேலைகளும் முடிவடைந்து படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். விரைவில் தணிக்கைக்கு அனுப்பவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிவாஜி பிறந்தநாளான அக்டோபர் ஒன்றாம்தேதி படம் வெளியாகவிருக்கிறதாம். அக்டோபர் ஒன்று வியாழக்கிழமையன்று வெளியாவதால் அடுத்தநாள் வெள்ளி, காந்திபிறந்தநாள் விடுமுறை தொடர்ந்து சனி, ஞாயிறு என்று நான்குநாட்கள் நல்லவசூல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close