Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வசூலை அள்ள கமல், அஜித் போட்டிருக்கும் புதியதிட்டம்

பாபநாசம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தூங்காவனம். இப்படத்தை கமலின் உதவியாளரான ராஜேஷ் எம்.செல்வா இயக்கிவருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக் கிழமை தூங்காவனம் படத்தை வெளியிட கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேநாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஐம்பத்தாறாவது படம் இது. மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆயினும் இன்னும் படத் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை. தயாரிப்பாளரான ரத்னம் இப்படத்தை நவம்பர் 5ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுவருகிறாராம்.

அவ்வாறு வெளியானால் தொடர்ந்து ஐந்து, ஆறு நாட்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை அள்ளிவிடலாம் என்று திட்டமிட்டு இரண்டுபடக் குழுவினரும் செயல்பட்டுவருகிறார்களாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close