Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன்!

ஹைக்கூ படம் முடிந்து , அடுத்ததாக 24 படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தையடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கம்3 படத்தில் நடிக்க இருக்கிறார். அனுஷ்கா ஹீரோயினாக நடிக்க இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த பாத்திரம் ஹீரோயின் கேரக்டர் இல்லையெனிலும் படத்தில் சூர்யாவுக்கு நிகரான பாத்திரமாம். சிங்கம் 2 படத்தில் இதே பாணியில் ஹன்சிகா நடித்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்சிகா.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சிங்கம் 3 படத்தில் தனக்கு நிகரான கேரக்டர் கொடுத்ததற்காக சூர்யாவுக்கு நன்றி கூறியுள்ளார். ஏழாம் அறிவு படத்தில் நான் அறிமுக நாயகியாக இருந்த போதிலும் எனக்கு படத்தில் ஹீரோவுக்கு நிகரான பாத்திரம் இருந்தது. அப்போதும் சூர்யா அதற்கு சம்மதித்தார். இப்போது இந்த சிங்கம் 3 படத்திலும் அவருக்கு நிகரான பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டமைக்கு அவருக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும் எனக் கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

தற்சமயம் அஜித்தின் 56வது படம், விஜய்யின் புலி, என ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த ஸ்ருதி ஹாசனுக்கு சூர்யாவுடனும் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்