Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட வாய்ப்பு உறுதியானது! ஷூட்டிங்குக்கு ரெடியாகும் நமீதா

விஜயகாந்துடன் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நமீதா. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். இறுதியாக இளைஞன் படத்தில் நடித்தார்.

தீடீரென்று அவரின் உடல் எடை அதிகரிக்கவும் தமிழில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ஓரிரு தெலுங்கு, கன்னட படங்களில் மட்டும் நடித்தார். தற்பொழுது கடும் உடற்பயிற்சியாலும், உணவுக் கட்டுப்பாட்டாலும் 20 கிலோவரைக்கும் உடல் எடையைக் குறைத்து 70 கிலோவுடன் மெலிந்த பழைய நமீதாவாக திரும்பினார்.

இதன் தொடர்ச்சியாக புதிய படவாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளனவாம். தற்பொழுது மலையாள ஸ்டார் மோகன்லாலுடன் “புலிமுருகன்” என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

“எனக்கு உடல் எடைபோட்டதால் படவாய்ப்புகள் இல்லாமல் போனது. உடன் இருந்த நண்பர்கள் கூட உதவவில்லை. ஒதுங்கிப்போனார்கள். இப்போது உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்ததால் மீண்டும் படவாய்ப்பு வருகிறது. மோகன்லாலுடன் மலையாள படத்தில் அதிரடி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். தமிழிலும் நடிக்க கதைக் கேட்டு வருகிறேன்” என்கிறார் நமீதா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close