Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலியையும், பாகுபலியையும் ஒப்பிடாதீர்கள் - நட்ராஜ் அதிரடி

இப்போதெல்லாம் கொஞ்சம் அரசர் கால கதைகளாகவோ, அல்லது பிரம்மாண்ட உருவாக்கமாகவோ இருப்பின் உடனே பாகுபலி படத்துடன் ஒப்பிடும் போக்கு ட்ரெண்டாகிவிட்டது. இப்படித்தான் பாயும் புலி என சொல்லும் போதெல்லாம் பாகுபலி என கேட்கிறது என அப்படத்தின் விழாவில் லிங்குசாமி தெரிவித்தார். 

இந்நிலையில் பலரும் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி, வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள புலி படத்தின் பிரம்மாண்ட மேக்கிங்காலும், அரசர் கால கதை போல் இருப்பதாலும் படத்தைப் பலரும் பாகுபலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். 

இதனையடுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் யாரும் பாகுபலியுடன் புலி படத்தை ஒப்பிட வேண்டாம். இரண்டும் வேறு வேறு கதைகள் எனக் கூறியுள்ளார். மேலும் புலி படத்தின் படப்பிடிப்புகளை யாருமே செல்ல  முடியாத அடர்ந்த காடுகளில் சிறப்பு அனுமதிகள் பெற்று படமாக்கினோம். எதிர்பாரா நேரங்களில் யானை , பாம்புகள் என பல ஆபத்தான சவாலான விஷயங்கள் எங்களுக்கு இருந்தன. 

ஜில்லா படத்திலேயே நான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டியது அச்சமயம் நான் பாலிவுட்டின் ‘ஹாலிடே’ பட ஷூட்டிங்கில் இருந்ததால் எனக்கு விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வாய்ப்பு புலி படத்தில் கிடைத்துள்ளது என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நட்டி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close