Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூங்காவனம் டிரெயிலரை காலி செய்ததா கபாலி முதல்பார்வை?

கமலின் தூங்காவனம் படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 16 ஆம் தேதி மாலை நாலரைமணியளவில் வெளியிடப்பட்டது. வெளியான உடனேயே ஏராளமானவர்களால் பார்க்கப்பட்ட அந்த முன்னோட்டம் டிவிட்டர் டிரெண்டில் முன்னணியில் இருந்தது.

அந்த முன்னோட்டம் வெளியான சில மணிநேரங்களில் கபாலி படத்தில் ரஜினியின் முதல்புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படம் வெளியானதும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

செப்டம்பர்16 முன்னிரவில் முதல்புகைப்படமும் 17 காலையில் ரஜினி கலந்துகொண்டு பூஜை செய்த கபாலி படத்தின் தொடக்கவிழா புகைப்படங்கள் இணையங்களை ஆக்கிரமித்துக்கொண்டது.

கமல் படத்தின் முன்னோட்டம் பற்றி யாருமே பேசவில்லை, ரஜினியின் ஒரு புகைப்படம் கமல் டிரெயிலரையே காணாமல் போகச் செய்துவிட்டது என்றெல்லாம் ரஜினிரசிகர்கள் பேசத்தொடங்கிவிட்டனர்.

ரஜினி படத்தின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தது என்று சொல்லப்பட்ட அதேவேளையில் கமலின் தூங்காவனம் முன்னோட்டமும் பெரும்பாலானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த முன்னோட்டம் வெளியாகி சுமார் நாற்பதுமணி நேரங்களில் பத்துஇலட்சம் பேர் அதைப் பார்த்திருக்கின்றனர். இதனால் கமல் ரசிகர்களும் உற்சாகமாகியிருக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close