Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்தது தவறு! அடித்துச்சொல்லும் ஷபானா ஆஸ்மி !

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார் நடிகை ஷபானா ஆஸ்மி. இவர் 5 தேசியவிருதுகளைப் பெற்றவர்.  ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதி இருவருக்கும் இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்துள்ளதாக ஃபத்வா கொடுத்துள்ளனர்.

இதற்கு ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பை ஷபானா ஆஸ்மி கேள்விகள் கேட்டுள்ளார். ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பு சரியான அங்கீகாரம் பெற்ற அமைப்பா. அல்லது எந்த அடிப்படையில் ஃபத்வா கொடுத்தார்கள். முக்கியமாக படத்தைப் பார்த்தார்களா அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதற்கு பதில் கண்டிப்பாக இல்லை தான்.

ஒரு படத்தைப் பாராமல் வாய்ச்சொல்லில் சொல்லும் நபர்களை நம்பி ஒரு படம் இப்படித்தான் இருக்கும் என எந்த நம்பிக்கையில் ஃபத்வா கொடுத்தார்கள். மேலும் ஃபத்வா என்பது விதிக்கப்படுவது அல்ல அது முழுமையான வேண்டுகோள் மட்டுமே. இவர்கள் அதையே தவறாகக் கொடுத்துள்ளார்கள். மேலும் தீர விசாரிக்காமல் ஃபத்வா கொடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார் ஷபானா ஆஸ்மி.

முக்கியமாக ஃபத்வா யார் வேண்டுமானாலும் யார் மேலும் கொடுத்து விட முடியாது, அதற்கென தனி முறைகள் உள்ளன எனவும் பதிவு செய்துள்ளார். ஷபானா ஆஸ்மி. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close