Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து மொழிகளில் புலி - இணையத்தைக் கலக்கும் வைரல்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் புலி.  புலி படம் ஆரம்பித்த நாளிலிருந்து எந்த செய்தியாக இருந்தாலும் உடனே வைரலாக்கி விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

சமீபத்தில் புலி படத்திற்கான இசை வெளியிடப்பட்டது. இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாவதும் அதிகாரப்பூர்வமாக முடிவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கன்னடம் மொழியிலும் டப் செய்தும் வெளியாகவிருக்கிறது.

இந்தச் செய்தி வெளியானதுமே விஜய் ரசிகர்கள் புலி வெளியாகும் அனைத்து மொழிகளிலும் புலி படப் பெயரை இணைத்து ட்ரெண்ட் செய்துவருகின்றனர். #PULIபுலிपुलीപുലിపులిಪುಲಿ இந்த ட்ரெண்டானது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் நட்டி ஒளிப்பதிவில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்திற்குப் பிறகு அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் புலி என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்