Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி பிறந்த நாளில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி!

இடைவிடாது இசையமைப்பில் பிஸியாக இருக்கும் அனிருத் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்.

விஜய்சேதுபதி நடிக்கும் நானும் ரவுடிதான் படத்தின் இசைக்கோர்ப்பு கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது.  இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கும் இசையமைப்பில் பிஸியாகவிருக்கிறார்.

இந்த இரண்டு படவேலைகளையும் முடித்துவிட்டு டொரொண்ட்டோவில் நடக்கவிருக்கும் திரைப்படத்திருவிழாவில் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி அவர் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்நாள் அனிருத்தின் பேவரைட் நடிகரான ரஜினியின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் தன்னுடைய ட்விட்டரில், “ அனிருத் லைவ் கான்செர்ட் டொரண்ட்டோவில் டிசம்பர் 12ல் நடைபெறவிருக்கிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். என்று கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்