Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தனி ஒருவன் 2’ திட்டத்தில் மோகன் ராஜா?

 மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி , நயன்தாரா கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த படம் தனி ஒருவன். போலீஸின் கடமைகள்,அரவிந்த் சாமியின் வித்யாசமான வில்லன் கெட்டப், என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் கூட பேசப்பட்டன. 

இந்நிலையில் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு ஏன் எடுக்கக்கூடாது கண்டிப்பாக எடுப்பேன். ஹாலிவுட்டில் மட்டும் தான் ஜேம்ஸ் பாண்ட், பேட் மேன் போன்ற படங்கள் வரவேண்டுமா, தமிழில் வரக்கூடாதா எனக் கேட்டிருக்கிறார்.

இப்படம் இந்தியாவின் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் தற்போது இந்த பார்ட் 2 செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனி ஒருவன் தெலுங்கில் ராம் சரணை மிகவும் கவர்ந்துவிட தெலுங்கு ரீமேக்கிற்கு அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்