Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறார் சிம்பு!

 இனி நான் ட்விட்டரில் இல்லை என்று சிம்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்து வெளியான படம் வாலு. வாலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுடன் நடித்துவரும் இது நம்ம ஆளு படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார்.

தொடர்ந்து கெளதம் மேனனுடன் அச்சம் என்பதுமடமையடா, செல்வராகவனுடன் கான் உள்ளிட்ட படங்களில் நடித்துவருவதால் இடைவிடாது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. அதனால் இனி ட்விட்டரில் நான் தொடரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.

ட்விட்டரில் சிம்பு கூறியதாவது, “ இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் .

தேவைப்பட்டால் மட்டுமே ட்விட்டரில் என்னுடைய கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக தரமான படம் கொடுக்கவேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அவர்களுடனான என்னுடைய தொடர்ப்பு வெற்றிதரும் படம் மட்டுமே. தவிர இதுசார்ந்த எந்த சமுக வலைதளங்களில் உங்களுடன் பேசுவதில் நான் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

என்னுடைய இந்த முடிவை நீங்கள் ஏற்றுகொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. மிஸ் யூ” என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close