Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் செல்வாக்கால் முதன்முறையாக ட்ரெண்டில் கபிலன்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வேறு சமீபத்தில் வெளியிடப்பட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. 

படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.படத்தின் இரண்டு பாடல்களை கபிலன் எழுதுகிறார் மேலும் இன்னும் எத்தனை பாடல்கள் கபிலன் எழுதுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து அந்தப் புகைப்படங்கள் சமூகவலைகளில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கபாலி ,ரஜினியை முந்திக்கொண்டு கபிலன் ட்விட்டரின் சென்னை ட்ரெண்டில் இடம்பிடித்துள்ளார். கபிலன் ரஜினிகாந்துடன் உணவு அருந்தியது, அரவணைத்து நின்றது, ரனியுடன் மெய் மறந்து பேசிய நிமிடங்கள் என அனைத்தும் நெட்டில் ஹிட்டடித்து வருகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close