Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேதாளம் பெயர்க் காரணம் என்ன?

 வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு வேதாளம்எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசை அனிருத். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் சூரி நடிக்கும் இப்படத்தின் வேதாளம் என தலைப்பு வைத்தமைக்கான காரணம் என்ன என நெருங்கிய வட்டாரங்களில் கேட்டபோது கிடைத்தத் தகவல் இதுதான்.. 

படத்தின் கதைப்படி நிகழ்கால, மற்றும் ஃப்ளாஷ் பேக் என இரு கதைகள் உள்ளனவாம். இதில் வேதாளம் என்பது ஃப்ளாஷ் பேக்கில் வரும் அஜித்தின் பெயராம். மேலும் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள மொட்டைத் தலை, காதில் கடுக்கன், கையில் காப்பு இருக்கும் தாதா போன்றத் தோற்றத்தில் தான் ஃப்ளாஷ் பேக்கில் வருகிறாராம் அஜித். 

படத்தில் இரண்டு அஜித் இல்லை. ஒரே அஜித் தான் தாதாவாக ஃப்ளாஷ் பேக்கில் இருப்பதாகவும், அந்த கேரக்டரின் பெயர்தான் வேதாளம் எனவும் காரணம் கிடைத்துள்ளது. எது எப்படியோ அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. 

படத்தின் ஒரு பாடல், மற்றும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே மீதியிருக்கிறது .மேலும் சில பேட்ச் வேலைகள் மட்டுமே மிச்சம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பாடலில் அஜித் மட்டுமே இடம் பெறும் மாஸ் பாடலாக இருக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close