Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனக்கு இவ்வளவு பணம் சேரும் என்று கனவிலும் நினைக்கவில்லை, சிலிர்க்கும் சமந்தா

விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படம் அடுத்தமாதம் வெளியாகவிருக்கிறது. இப்போது சூர்யாவுடன் 24 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக விஜய் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.  தமிழ், தெலுங்கு மொழிகளில் மகேஷ்பாபு நடிப்பில் தயாராகிவரும் பிரமோற்சவம் படத்திலும் இவரே நாயகி.

திரையுலகில் பிஸியாக இருக்கும் சமந்தா, சமுகசேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. அவரால் தான் அவரால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். கடவுள் என்னை கதாநாயகியாக நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார். அதிகமான ரசிகர்களையும் எனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். நல்ல படங்கள் அமைகின்றன.

ரசிகர்கள் மத்தியில் எனது படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.நான் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டோம். இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

சமூகசேவைகளில் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. பண வசதி இல்லாத காலத்திலேயே என் அம்மா மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். இப்போது என்னிடம் பணம் இருப்பதால் நானும் சமூகசேவை செய்கிறேன் என்கிறார் சமந்தா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close