Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதர்வா படத்தைக் கைவிட்ட வெற்றிமாறன்

அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஈட்டி”. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் அதர்வா , நாயகி ஸ்ரீ திவ்யா ,படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் ,செரொபின் ராய சேவியர் , இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் திரு. தாணு உட்பட பலர்  கலந்து கொண்டு  பேசினர்.

விழாவில், இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, இந்த ஈட்டி படத்தை முதலில் நான் தயாரிப்பதாக  இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்றது, அதன்பின் மைக்கேல் ராயப்பன் சாரின் கைக்குச் சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால் படத்தை இவ்வளவு பெரிதாக தயாரித்திருக்கமாட்டேன். மைக்கேல் ராயப்பன் அவர்கள் மிகவும் துணிவான தயாரிப்பாளர்  நிச்சயமாக படத்தை அவர் வேறு இடத்துக்கு கொண்டு செல்வார்.
 
ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்துக் கொண்டே ஒரே இரவில் , ஒரு பாடலின் கம்போசிங்கை முடித்துவிடலாம்.
 
அதர்வா இந்தப் படத்துக்குக் கொடுத்துள்ள உழைப்பு பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால் தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்தப்படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது என்று பேசினார்.   இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகவிருக்கிறது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close