Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைமாறியது கமல்படம்

  ராஜேஷ்எம்செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தூங்காவனம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. தீபாவளிக்கு இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல்நிறுவனமும் ஸ்ரீகோகிலம்மூவிஸ் படநிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்போது இந்தப்படத்தைத் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை, எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதற்காகப் பெரும்தொகை கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களைத் தயாரித்த இந்தநிறுவனம் முதன்முறையாக கமல் நடிக்கும் படத்தை வாங்கிவெளியிடவிருக்கிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close